News October 18, 2024
சமயபுரம் போலீசாரின் ரவுடிகள் வேட்டை

திருச்சியில் பிரபல ரவுடி குமுளி ராஜ்குமார் இவரது கூட்டாளிகளான பாலசுப்பிரமணியன், சமயபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ், அருண், ராமு, லட்சுமணன், வெங்கடாஜலபதி, கணேசன், விநாயகமூர்த்தி, வள்ளி அருணன், கார்த்திக் ஆகிய 9 பேரை சமயபுரம் போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், 2 வீச்சருவாள்கள் 28 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
Similar News
News August 17, 2025
திருச்சி: திடீர் மின்தடையா ? உடனே கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
News August 17, 2025
திருச்சியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, வருகிற 31ம் தேதி ஜமால் முகமது கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற, 18 – 35 வயதுக்குட்பட்டவர்கள் கல்வி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் பங்கேற்கலாம்.
News August 17, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.18) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் முசிறி, தண்டலைப்புதூர், தும்பலம், மணமேடு, எடமலைப்பட்டி புதூர், மன்னார்புரம், கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜாமலை, மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மெண்ட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE !