News April 11, 2024
சமயபுரம் கோவிலில் இவ்வளவு காணிக்கையா.!

மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. அதில், ரொக்க பணமாக ரூ.92 லட்சத்து 93 ஆயிரத்து 585, தங்கம் 1 கிலோ 296 கிராமும், வெள்ளி 2 கிலோ 579 கிராமும், அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 114 மற்றும் அயல் நாட்டு நாணயங்கள் 1288 காணிக்கையாக கிடைக்கப் பெறப்பட்டன.
Similar News
News July 7, 2025
திருச்சி: சொந்த ஊரில் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 104 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க! <<16974036>>(பாகம்-2)<<>>
News July 7, 2025
திருச்சி: சொந்த ஊரில் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை (2/2)

➡️ விண்ணப்பிக்கும் நபர் அதே கிராமம் / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
➡️ வயது: 21 முதல் 37-க்குள் இருக்க வேண்டும்
➡️ சைக்கிள் / டூவீலர் ஓட்ட தெரிந்திருந்தால் நல்லது
➡️ எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
➡️ கிராம உதவியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு விஏஓ-வாக பதவி உயர்வு வழங்கப்படும்
➡️ மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News July 7, 2025
திருச்சி: சிறப்பு சமரச தீர்வு முகாம் தொடக்கம்

திருச்சி நீதிமன்றத்தில் அமைந்துள்ள சமரச தீர்வு மையத்தில் சிறப்பு சமரச தீர்வு முகாம் தற்போது தொடங்கி உள்ளது. செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் இந்த முகாமில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கிக் கடன், நிதி நிறுவன கடன், நுகர்வோர் வழக்குகள் மற்றும் ஏனைய வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.