News January 14, 2026

சபரிமலை மகர ஜோதியின் பின்னணி என்ன?

image

<<18851968>>சபரிமலையில் <<>>ஆண்டுக்கு ஒருமுறை ‘கொச்சுபம்பா’ ஊரின் பொன்னம்பலமேட்டில் கற்பூரங்களால் கொளுத்தப்படும் தீபமே மகர ஜோதி. ஐயப்பனே தீப வடிவமாக தோன்றுகிறார் என்பது ஐதீகம். சங்கராந்திக்கு 2 நாட்களுக்கு முன் பந்தளத்தில் இருந்து 3 பெட்டியில் திருவாபரணங்கள் சபரிமலை வரும். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வைர கிரீடம், தங்க ஆரம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்ட ‘சரணம்ஐயப்பா’ என்னும் கோஷம் நிறையும்.

Similar News

News April 7, 2026

வேறொருவருடன் மனைவி.. கோர்ட் அனுமதியால் பரபரப்பு

image

தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார், கணவர். இதன் மீதான விசாரணையில், எனக்கு 19; கணவருக்கு 40. என்னால் அவருடன் வாழ முடியாது. நான் விரும்பியவருடனே வாழ விரும்புகிறேன் என மனைவி வாதிடுகிறார். இதனை ஏற்ற ம.பி., HC, விரும்பாத திருமண உறவிலிருந்து வெளியேறி தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ பெண்ணுக்கும் உரிமை உண்டு என தெரிவித்துள்ளது.

News April 7, 2026

‘மாம்பழம்’ சின்னம்: ஐகோர்ட்டை நாடிய ராமதாஸ்!

image

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோருவதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. சின்னத்தை முடக்க மறுத்து உரிமையியல் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டை நாட அறிவுறுத்தியிருந்தது.

News April 7, 2026

இனி ஆண்டுக்கு இரு முறைதான் CA இறுதித் தேர்வு

image

இனி ஆண்டுக்கு 2 முறை மட்டுமே CA இறுதித் தேர்வு நடைபெறும் என ICAI அறிவித்துள்ளது. இதன்படி, மே & நவம்பரில் இறுதித் தேர்வுகள் நடைபெறும். முன்னதாக, ஜனவரி, மே & செப்டம்பர் மாதங்களில் இறுதித் தேர்வுகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், முதல்நிலை, இடைநிலை தேர்வுகள் வழக்கம்போல் 3 கட்டங்களாக நடைபெறும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!