News November 21, 2025

சபரிமலை தங்கம் மாயம்: முன்னாள் தலைவர் கைது

image

சபரிமலையில் காவல் தெய்வத்தின் சிலைக்கு தங்க முலாம் பூசுவதற்கான <<17989986>>தங்கம் மாயமான வழக்கில்<<>>, ஏற்கெனவே 5 பேரை கைது செய்து கேரளா SIT விசாரணை நடத்தியது. இதில் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தேவசம்போர்டின் முன்னாள் தலைவர் பத்மகுமாருக்கு SIT நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி நேற்று நேரில் ஆஜரான அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாலையில் SIT அவரை கைது செய்தது.

Similar News

News April 13, 2026

இது கிட்னி திருடும் அரசு: அண்ணாமலை

image

தமிழ்நாட்டில் கிட்னி திருடும் அரசு நடப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். ராசிபுரம் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அண்ணாமலை, நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 250 அப்பாவி மக்களின் கிட்னியை திமுகவினர் திருடியதாக சாடினார். இதுக்கு பெயர் திராவிட மாடல் அரசு அல்ல, கிட்னி திருடும் அரசு என விமர்சித்த அவர், NDA கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், கிட்னி திருடர்கள் சிறைக்கு செல்வார்கள் எனவும் தெரிவித்தார்.

News April 13, 2026

BREAKING: டாஸ்மாக் 3 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து ECI சற்றுமுன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்.21- 23-ம் தேதி இரவு வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும், பார்களும் கட்டாயம் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்பனை செய்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

News April 13, 2026

கழுத்தைப் பிடித்து தள்ளாத குறை.. OPS வேதனை

image

EPS-ஆல் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு தேர்தலில் மக்கள் தீர்வு தருவார்கள் என OPS கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து தானாக வெளியேறவில்லை என்றும், அநியாயமாக கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, அவரை அதிமுகவில் இருந்து EPS நீக்கியது குறிப்பிடத்தக்கது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!