News November 15, 2024

சபரிமலை: சேலம் வழியாக சிறப்பு ரயில்கள்

image

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, சேலம் வழியாகச் செல்லும் கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவ.22, 29ல் மௌலா அலியில் இருந்து கொல்லத்திற்கும், நவ.24, டிச.01ல் கொல்லத்தில் இருந்து மௌலா அலிக்கும், நவ.18, 25ல் மச்சிலிப்பட்டணத்தில் இருந்து கொல்லத்திற்கும், நவ.20, 27ல் கொல்லத்தில் இருந்து மச்சிலிப்பட்டணத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 

Similar News

News March 2, 2026

பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு இன்று நண்பகல் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்தது. இதையடுத்து, மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீசார் அதிநவீன கருவிகளுடன் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர ஆய்விற்குப் பின், இது வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை

News March 2, 2026

சேலம்: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

சேலம்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

சேலம் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!