News December 12, 2025
சபரிமலையில் மேலும் ஒரு தமிழர் உள்பட 19 பேர் மரணம்

சபரிமலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு பக்தர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வமணி(40) என்ற பக்தர் மலைப்பாதையில் மயங்கி விழுந்த போது உயிர் பிரிந்துள்ளது. நவ.16-ல் நடை திறக்கப்பட்ட நிலையில், TN-ல் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். நடப்பு சீசனில் கோவை, கடலூரை சேர்ந்த பக்தர்கள் உட்பட 19 பேர் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர்.
Similar News
News December 12, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹7,000 அதிகரித்தது

<<18543841>>தங்கம் விலை<<>> ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில், வெள்ளி விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளி ₹7,000 அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. தற்போது, சென்னையில் வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ₹216-க்கும், ஒரு கிலோ ₹2.16 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் வெள்ளி விலை ₹20,000 வரை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News December 12, 2025
IPL ஏலம்: அதிரடி ஆல்-ரவுண்டர்களின் லிஸ்ட்..

IPL ஏலத்தில், சிறப்பான பினிஷிங் மற்றும் சில ஓவர்கள் பந்துவீசக்கூடிய ஆல்-ரவுண்டர்களை வாங்க அணிகள் முனைப்பு காட்டுகின்றன. இந்நிலையில், முதல் ஆல்-ரவுண்டர்கள் செட்டில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. V.iyer, அட்கின்ஸன், ஹசரங்கா, ரச்சின், லிவிங்ஸ்டனின் அடிப்படை ஏலத்தொகை ₹2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மல்டர், தீபக் ஹூடாவும் இப்பட்டியலில் உள்ளனர். யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது?
News December 12, 2025
324 சமுதாய மக்களும் வளர வேண்டும்: ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராமதாஸ், வன்னியர்கள் மட்டுமல்ல 324 சமுதாய மக்களும் படிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார். அனைத்து சமூக மக்களும் நலமாக வாழ வேண்டும் என்றார். மேலும், இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது என குறிப்பிட்டார்.


