News November 17, 2025
சபரிமலையில் இன்று முதல் 90,000 பக்தர்களுக்கு அனுமதி

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் 1-ம் தேதியான இன்று தொடங்கி 60 நாட்கள் இந்த சீசன் நடைபெறும். இந்நிலையில் தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பேரும், உடனடி தரிசனம் மூலம் 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் ஒரு மாத காலத்துக்கான முன்பதிவு இப்போதே முடிவடைந்துவிட்டது.
Similar News
News November 17, 2025
சியா விதைகளை இப்படி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

சியா விதைகளை ஊற வைக்காமல் அப்படியே வாயில் போட்டுவிட்டு, பிறகு தண்ணீர் அருந்தக்கூடாது. இப்படி செய்வதால், அந்த விதைகள் உங்கள் தொண்டையில் சிக்கி மூச்சடைப்பை ஏற்படுத்தும். பிறகு குடல்களில் அடைப்பை ஏற்படுத்தி பல வயிற்றுப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சியா விதைகளை தண்ணீரில் அரை மணி நேரமாவது ஊறவைத்து சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE THIS.
News November 17, 2025
BREAKING: கனமழை.. முதல் மாவட்டமாக விடுமுறை

நள்ளிரவில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாகைக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News November 17, 2025
காப்பிரைட் பற்றி சிந்திப்பதில்லை: தேவா

தற்போது நிறைய பேர், தங்கள் பாடல்கள் பிற படங்களில் பயன்படுத்தப்படுவதற்கு காப்பிரைட் கேட்கின்றனர், ஆனால் அதை பற்றி தான் சிந்திப்பதே இல்லை என்று தேவா கூறியுள்ளார். பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்கின்றனர் என்பதற்காக, தற்போது உள்ள இசையமைப்பாளர்கள் நன்றாக இசையமைக்கவில்லை என கூறிவிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது பாடல்கள் ரசிக்கப்படுவதையும் கூறி நெகிழ்ந்தார்.


