News November 22, 2025

சபரிமலைக்கு நவ.28 முதல் சிறப்பு பஸ்கள்

image

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து நவ.28 முதல் ஜன.16 வரை கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சபரிமலை செல்லும் பக்தர்கள் www.tnstc.in இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிச.27 – 30 வரை கோயில் நடை சாத்தப்படுவதால் அந்த நாள்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாது.

Similar News

News November 24, 2025

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்கள்: வங்கதேசம்

image

மாணவர் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட படுகொலைகளை தடுக்க தவறியதாக, வங்கதேச Ex PM ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஹசீனாவை நாடு கடத்தக் கோரி, முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு அதிகாரப்பூர்வமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கெனவே, தீர்ப்பை அடுத்து ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும் என இந்தியா கூறியிருந்தது.

News November 24, 2025

மீண்டும் களத்தில் ரோஹித், கோலி

image

SA-க்கு எதிரான ODI போட்டிக்கான அணியில் ரோஹித், கோலி இடம்பெற்றுள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸி.,க்கு எதிரான ODI தொடரின் முதல் போட்டியில் Ro-Ko இணை சோபிக்கவில்லை. 2-வது போட்டியில் ரோஹித் (73 ரன்கள்) அதிரடி காட்ட, கோலி டக் அவுட்டானார். ஆனால், கடைசி ODI போட்டியில் ரோஹித் (121 ரன்கள்), கோலி (74 ரன்கள்) இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

News November 24, 2025

எல்லோரும் MGR ஆகி விட முடியாது: ஜெயக்குமார்

image

MGR குறித்து விஜய் பேசியதற்கு, எல்லோரும் MGR ஆகி விட முடியாது என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். வானத்தில் ஒரு சந்திரன் இருப்பதுபோல், ஒரே ராமச்சந்திரன்தான்(MGR) என்றும் அவர் பதிலளித்துள்ளார். MGR இல்லாமல் அரசியலே கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் தேர்தல் வாக்குறுதி குறித்து எழுப்பிய கேள்விக்கு, முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் என கிண்டலாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!