News March 25, 2025
சனிப்பெயர்ச்சி குறித்த குழப்பம்: திருநள்ளாறு கோயில் நிர்வாகம் விளக்கம்

திருநள்ளாறு கோயிலில் வரும் மார்.29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுமா? இல்லையா? என்பது குறித்து கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. பாரம்பரிய கணிப்பு முறையின் படி, 2026ஆம் ஆண்டிலேயே சனிப் பெயர்ச்சி நடைபெறும். மார்.29 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும். சனி பெயர்ச்சி நடைபெறும் சரியான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது. பக்தர்களுக்கு பகிரவும்
Similar News
News September 13, 2025
புதுச்சேரி கலால் துறை முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி கலால் துறை நேற்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு எந்த மதுபானமும் விற்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து வகையான மதுபான வியாபாரிகள் சில்லறை வியாபாரிகள், சாராயம் மற்றும் மது கடைகளுக்கு கலால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
News September 13, 2025
புதுவை: பெண்ணை தாக்கி பணம், நகை பறிப்பு

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசி, நேற்று முன்தினம் காலை புதுவை மீன் மார்க்கெட் செல்ல கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகில் பஸ் ஏற நின்றபோது, ஸ்கூட்டியில் வந்த மர்ம நபர் ஒருவர், தமிழரசிக்கு லிப்ட் கொடுப்பதாகக்கூறி ஏற்றி சென்று; இ.சி.ஆரில் அவரை தாக்கி ரூ.1,500 மற்றும் 1 கிராம் நகையை பறித்து சென்றதாக அவர் கொடுத்த புகாரின் பேரில், கோட்டகுப்பம் போலீசார் தமிழ்ச்செல்வன் என்பவரை கைது செய்துள்ளனர்.
News September 13, 2025
புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று (செப்.13) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை புகார் மூலம் தெரிவிக்கலாம்.” என கூறப்பட்டுள்ளது. SHARE IT NOW…