News December 11, 2025

சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும்.. அரசு அறிவிப்பு

image

மழை விடுமுறையை ஈடுசெய்ய புதுச்சேரியில் சனிக்கிழமை (டிச.13) பள்ளிகள் இயங்கும் என கல்வித் துறை அறிவித்துள்ளது. டிட்வா புயல் எதிரொலியாக, கடந்த வாரம் கனமழை கொட்டித் தீர்த்ததால் புதுச்சேரி, காரைக்காலில் சில நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டன. அதனை ஈடுசெய்யும் விதமாக சனிக்கிழமை பள்ளிகள் விடுமுறை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் இதேபோன்ற அறிவிப்பு வெளியாகலாம்.

Similar News

News March 30, 2026

BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

தங்கம் விலை காலையில் நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த நிலையில், மாலையில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹480 குறைந்த நிலையில், மாலையில் தடாலடியாக ₹1,360 அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹13,770-க்கும், 1 சவரன் ₹1,10,160-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை, 3 நாள்களாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News March 30, 2026

₹4.13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

image

வாரத்தின் முதல்நாளே பங்குச்சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன. காலை முதலே சரிவில் இருந்த பங்குச்சந்தைகள், இன்றைய வர்த்தக நாளின் முடிவில் நிஃப்டி 488 புள்ளிகள் குறைந்து 22,331 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 1,635 புள்ளிகள் சரிந்து 71,947 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. இதனால் ஒரேநாளில் முதலீட்டாளர்கள் சுமார் ₹4.13 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.

News March 30, 2026

வெடிகுண்டு மிரட்டல் மன்னன் கைது!

image

நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவந்த ஸ்ரீனிவாஸ் லூயிஸ் (47) என்பவரை போலீசார் மைசூரில் கைது செய்துள்ளனர். அவர் பள்ளிகள், ஐகோர்ட்கள் மற்றும் அரசுக் கட்டடங்களில் குண்டு வைத்துள்ளதாக கூறி 1,100-க்கும் மேற்பட்ட மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார். அவர் வேலையில்லாத ஒரு முதுகலைப் பட்டதாரி என்றும், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!