News December 27, 2024
சத்யபிரியா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா என்ற பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் இன்று மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த இந்த கொடூர கொலை, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மகள் இறந்த துயரத்தை ஏற்க முடியாத தந்தை அன்றே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிபிசிஐடி காவல்துறை தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
Similar News
News August 28, 2025
BREAKING: மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு

தொழில்நுட்பக் கோளாறால் சென்னையில் மெட்ரோ ரயிலில் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்-அப் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். CMRL மொபைல் செயலி, Paytm, phonepe, பயண அட்டைகள் மூலம் டிக்கெட்களை பெறலாம். கோளாறு சரிசெய்யப்படும் வரை பயணிகள், கவுன்ட்டரில் டிக்கெட்டுகளை பெறலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
News August 28, 2025
சென்னை: கூட்டுறவு வங்கி வேலைக்கு விண்ணபிப்பது எப்படி?

▶️சென்னை கூட்டுறவு சங்கம் (ம) வங்கியில் காலியாக உள்ள 194 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ▶️விண்ணபிக்க https://www.drbchn.in/index.php இணையதளத்திற்கு செல்ல வேண்டும். ▶️பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். ▶️நாளை (ஆக.29) கடைசி ஆகும். (SHARE பண்ணுங்க)
News August 28, 2025
3 நாள்களுக்கு தண்ணீர் வராது

மெட்ரோ ரயில் பணிக்காக 3 நாள்கள் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி ஆக.28, 29, 30 ஆகிய தேதிகளில் மாதவரம், அம்பத்தூர், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அவசர தேவைக்கு https://cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)