News November 22, 2025
சதுரங்கவேட்டை பாணியில் DMK ஆட்சியை பிடித்தது: ராஜூ

மெட்ரோ ரயில் வருவதற்கு திமுக அரசு விரும்பவில்லை என செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். 2026 தேர்தலுக்காக திமுக அரசு மெட்ரோ குறித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவித்த அவர், கடந்த தேர்தலில் சதுரங்க வேட்டை பாணியில் மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். மெட்ரோ திட்டத்தை வைத்து நாடகமாடி மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக முயல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News February 10, 2026
காங்கிரஸ் யாருடன் கூட்டணி? மீண்டும் ராகுல் ஆலோசனை

ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட காரணங்களால் திமுக, காங்கிரஸ் கூட்டணியை இறுதி செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ராகுல் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கூட்டணி குறித்து தமிழக தலைவர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி கருத்துக்கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.
News February 9, 2026
ஏப்.13-ல் தமிழகத்திற்கு தேர்தல்?.. வந்தாச்சு அப்டேட்

தமிழக சட்டமன்ற தேர்தலை ஏப்.13-ம் தேதி நடத்த ECI திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்.2-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து, 10 நாள்களுக்கு பிறகு வாக்குப்பதிவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ECI துணை ஆணையர் <<19077197>>பானு பிரகாஷ் எத்துரு <<>>நாளை மறுநாள்(பிப்.11) தமிழகம் வருகிறார். அவரது ஆய்வுக்கு பிறகு தேர்தல் தேதியை இறுதி செய்து அறிவிப்பு வெளியாகும்.
News February 9, 2026
ஒரு நிமிடம் போதும்.. வேலை அழுத்தத்தை குறைக்கலாம்!

அலுவலகத்தில் வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்களா? வேகஸ் நரம்பை தூண்டுவதன் மூலம், இந்த மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இதற்கு நீங்கள், மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுக்கவும். இடைநிறுத்தி மீண்டும் மூச்சை உள்ளிழுக்கவும். பின்னர் மெதுவாக வாய் வழியாக மூச்சை வெளியேவிடவும். இதை 4-5 முறை செய்தால், மன அழுத்தம் குறையும்.


