News April 18, 2025

சதுரகிரி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தரமகலிங்கம் கோயில் உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி கடந்த 3-ம் தேதி முதல் பக்தர்கள் தினசரி 100 பக்தர்கள் மலையேறி சென்று வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்று விட்டு இறங்கி கொண்டிருந்த போது சின்னபசுக்கிடை – இரட்டைலிங்கம் இடையே யானைகள் கூட்டமாக வந்ததால் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.

Similar News

News April 19, 2025

முழு வீச்சில் தயாராகும் பொருட்காட்சி திடல்

image

சிவகாசி சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முதல் ஒரு மாதம் பிரம்மாண்ட பொருட்காட்சி நடைபெற உள்ளது. விளாம்பட்டி சாலையில் நடைபெற உள்ள பொருட்காட்சிக்கான முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க அதிநவீன பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற உள்ளன. தற்போது பொருட்காட்சி திடல் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

News April 19, 2025

விருதுநகரில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்

image

▶️திருச்சுழி பூமிநாதர் சுவாமி திருக்கோயில்
▶️காமராஜர் நினைவு இல்லம்
▶️சஞ்சீவி மலை
▶️குக்கன்பாறை
▶️செண்பகத்தோப்பு அணில் சரணாலயம்
▶️அய்யனார் அருவி
▶️சதுரகிரி மலை
▶️பள்ளிமடம்
▶️பிளவாக்கல் அணை
▶️இருக்கன்குடி மாரியம்மன் கோயில்
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

News April 19, 2025

விருதுநகரில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை

image

விருதுநகரில் உள்ள தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!