News October 17, 2025

சதுரகிரி செல்ல 5 நாட்கள் தடை

image

மதுரை சங்ககிரி மகாலிங்கம் மலைக்கோயில் 18ம் தேதி ஐப்பசி மாத சனி பிரதோஷம் 21ஆம் தேதி அமாவாசை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை பெய்வதால் சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது எனவே (இன்று) 17 முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேறிச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

Similar News

News October 18, 2025

மதுரையில் மல்லிப்பூ விலை உயர்வு

image

உணவு உணவு மதுரை மல்லி கிலோ ரூ.1500, பிச்சி ரூ.1000, முல்லை ரூ.900, செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.60, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.500, ரோஸ் ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.200, பன்னீர் ரோஸ் ரூ.250, கோழிக்கொண்டை ரூ.70, அரளி ரூ.150, மரிக்கொழுந்து ரூ.70, தாமரை (ஒன்றுக்கு) ரூ.15 உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தீபாவளியை ஒட்டி மதுரை மல்லியின் விலை ரூ.2 ஆயிரத்தைத் தொடும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துll

News October 18, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (17.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 17, 2025

ரூ 5 கோடியில் திருமலை நாயக்கர் மஹாலில் டிஜிட்டல் ஒலி ஒளி காட்சி

image

மதுரையில் சரித்திர அடையாள பெருமைகளில் ஒன்றாக இருப்பது திருமலை நாயக்கர் மஹாலில் நடத்தப்பட்டு வரும் ஒலி ஒளி காட்சி சுற்றுலா பயணிகள் பொதுமக்களை மிகவும் கவர்ந்ததாக இருந்தது பழுதடைந்த இந்த காட்சி சேவையை புதுப்பிக்க ரூ 5 கோடி செலவில் லேசர் ஒலி ஒளி 3 டி புரஜக்சன் தொழில் நுட்பத்தில் நவீன முறையில் தயாராகிவரும் ஒலி ஒளி காட்சி பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சேவை டிசம்பருக்குள் துவக்கப்பட உள்ளது.

error: Content is protected !!