News December 1, 2025
சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக சதுரகிரி மலை ஓடைகளில் அதிகளவு நீர் வரத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை முதல் மழை பெய்யாததாலும், ஓடைகளில் நீர் வரத்து குறைந்து விட்டதாலும் இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News December 3, 2025
அரசு மருத்துவமனை கட்டிடம் விரைவில் திறப்பு

அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் டயாலிசிஸ் வசதி, அறுவை சிகிச்சை அரங்குகளுடன் ரூ.34 கோடி மதிப்பில் ஆறு தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள கட்டிடம் சில நாட்களில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News December 2, 2025
டாக்டர் கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு

சிவகாசி அருகே மாரனேரி பகுதிகளில் கடந்த 25ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பாக மதுரையில் ஜனவரி 7ல் நடைபெறும் மாநாடு குறித்து அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது இரவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக டாக்டர் கிருஷ்ணசாமி,மத்திய மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 8 பேர் மீது மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.