News April 4, 2025

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தினசரி வழிபாடு

image

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தினசரி மலையேறிச் சென்று சதுரகிரி சதுரகிரியில் வழிபாடு நடத்த நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சதுரகிரி மலை அடிவாரமான வத்திராயிருப்பு தாணிப்பாறை நுழைவு வாயிலில் காலை 6 முதல் 10 மணி வரை தினசரி அனுமதிக்கப்படுவர். மாலை 4 மணிக்குள் அடிவாரம் திரும்பி வரவேண்டும்.பக்தர்களை அனுமதிப்பது குறித்து முன் அறிவிப்பு இல்லாததால் முதல் நாளான நேற்று ஒரு சில பக்தர்களை வந்திருந்தனர்.

Similar News

News April 11, 2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகரில் வரும் மே 15ஆம் தேதிக்குள் அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும். பெயர் பலகைகளை தமிழில் வைக்காத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 11, 2025

மாணவி தனிமைப்படுத்திய விவகாரத்தில் கைது நடவடிக்கை தேவை

image

பொள்ளாச்சி அருகே மாதவிடாய் காரணமாக மாணவியை வகுப்புக்கு வெளியே தேர்வெழுத வைத்து தனிமைப்படுத்திய விவகாரத்தில் பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி, உதவியாளர் சாந்தி ஆகியோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக மாநில பொருளாளர் சிவகாசி திலகபாமா வலியுறுத்தியுள்ளார். பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

News April 11, 2025

விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ் 21- 24 வயதிற்குட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு இணையதளத்தில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பயிற்சிக்காலத்தில் 12 மாதங்களுக்கு உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.5000 வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க ஏப்.15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!