News April 25, 2025
சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு

மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவுப்படி கடந்த மார்ச். 3-ம் தேதி முதல் பக்தர்கள் தினசரி மலையேறி சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Similar News
News April 26, 2025
மல்லாங்கிணற்றில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

காரியாபட்டி அருகே சூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சூரிய குமார் என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக மல்லாங்கிணறு விஏஓ கரைமேலு என்பவரை அணுகியுள்ளார். அவர் பெயர் மாற்றம் செய்ய ரூ.3500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சூரியகுமார் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையை நாடி அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை விஏஓவிடம் வழங்கிய போது அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
News April 25, 2025
விருதுநகரில் மானியத்துடன் கூடிய நுண்ணீர்பாசனம்

‘துளி நீரில் அதிக பயிர்” திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 1100 ஹெக்டர் பொருள் இலக்கும், ரூ.5.50 இலட்சம் நிதி இலக்கும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் நிறுவுவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் MIMIS என்ற இணையத்தின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
News April 25, 2025
விருதுநகர்: ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணி

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ள நிலையில் மாத ஊதியமாக ரூ.19900 வழங்கப்படும் .இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை rrbchennai.gov.in என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விருதுநகர் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.