News August 19, 2025

சதுரகிரி கோயிலில் ரூ.38 லட்சம், 35 கிராம் தங்கம் வசூல்

image

வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. இதில் 21 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். காணிக்கை எண்ணும் பணி 3 நாட்கள் நடைபெற்றது. சந்தன மகாலிங்க கோயிலில் ரூ.3,80,336 பணமும், சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூ.34,19,850 பணமும், 35 கிராம் 430 மில்லி தங்கமும்,120 கிராம் 330 மில்லி கிராம் வெள்ளியும் கிடைத்தது.

Similar News

News November 5, 2025

வெம்பக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

வெம்பக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேல் என்ற கண்ணன்(42). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2025

விருதுநகர்:காரின் மேல் அமர்ந்து சென்றவர்கள் மீது வழக்கு

image

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதிமுறைகளை மீறி காரின் கதவுகளை திறந்தபடியும், அதன் மேலே உட்கார்ந்தபடியும் சென்ற 9 வாகனங்கள் மீது அருப்புக்கோட்டை, திருச்சுழி போலீசார் வழக்கு பதித்துள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்து விதிகளை மீறிய மற்ற வாகனங்கள் மீது வழக்கு பதியப்பட உள்ளது.

News November 4, 2025

விருதுநகர்: 9 வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்கு

image

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதிமுறைகளை மீறி காரின் கதவுகளை திறந்தபடியும், அதன் மேலே உட்கார்ந்தபடியும் சென்ற 9 வாகனங்கள் மீது அருப்புக்கோட்டை, திருச்சுழி போலீசார் வழக்கு பதித்துள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ மூலம் ஆய்வு செய்து விதிகளை மீறி சென்ற மற்ற வாகனங்கள் மீது வழக்கு பதிவு.

error: Content is protected !!