News April 2, 2025
சதுரகிரி அனுமதி குறித்து ஆலோசிக்க வனத்துறைத் திட்டம்

சுந்தரபாண்டியத்தை சேர்ந்த சடையாண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்,சதுரகிரிக்கு தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை வனத்துறை சோதனை சாவடி வழியாக பக்தர்களை அனுமதிக்கவும், இரவில் மலையில் தங்கினால் அவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை அமல்படுத்தி தினமும் பக்தர்களை அனுமதிக்கலாமா அல்லது மேல்முறையீடு செய்யலாமா என வனத்துறை யோசித்து வருகிறது.
Similar News
News September 16, 2025
விருதுநகர்: மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சிவகிரி வனப்பகுதி தேவியாறு அருகே 2 நாட்களுக்கு முன் காட்டுத்தீ பரவியது. வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றும் கடும் வெயில், காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. வேகமாக பரவி வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் தீயினை மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News September 16, 2025
விருதுநகர்: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த <
News September 16, 2025
விருதுநகர்: மாறி மாறி அரிவாளால் தாக்கிக் கொண்ட கொடூரம்..!

சிவகாசி பகுதியை சேர்ந்த கருத்தபாண்டி அவரது குடும்பத்திற்கு பணம் தராமல் உறவினர்களுக்கு செலவு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இவரது மகன் சுதாகர் கருத்தப்பாண்டியின் உறவினர்களான சந்தோஷ், சந்தியா ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சந்தோஷ், சந்தியா உள்ளிட்ட 4 பேர் சுதாகரை மீண்டும் அரிவாளால் தாக்கினர். கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.