News January 4, 2026

சதாம் உசேன் to மதுரோ வரை.. ‘Delta Force’ எனும் ரகசிய படை!

image

வெனிசுலா அதிபரை கைது செய்த ‘Delta Force’, US ராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த படைப்பிரிவாகும். 1977-ல் உருவாக்கப்பட்ட இந்த படை, அபாயகரமான ரகசிய ஆப்ரேஷன்களை மேற்கொள்வதில் பெயர் பெற்றது. பொதுமக்களை போல சாதாரண உடைகளில் ஊடுருவி மின்னல் வேகத்தில் இலக்குகளை தகர்க்கும் வல்லமை கொண்டது. சதாம் உசேன் முதல் தற்போது <<18758081>>மதுரோ<<>> வரை பல சர்வதேச ஆப்ரேஷன்களை அசால்ட்டாக செய்து முடிக்கும் அதிநவீன படை தான் ‘Delta Force’.

Similar News

News February 2, 2026

BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா

image

தேமுதிகவை மதித்து எந்த கூட்டணியில் அதிக இடம் வழங்குகிறார்களோ அவர்களுடனே கூட்டணி என பிரேமலதா உறுதியாக தெரிவித்துள்ளார். குமரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், நாளை(பிப்.3) கூட்டணி முடிவை தலைமை அலுவலகத்தில் அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக வரும் சட்டப்பேரவை தேர்தல் மட்டுமல்ல அதனைத் தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றி பெறும் என கூறினார்.

News February 2, 2026

தினமும் ஒன்று.. உடலுக்கு நன்று!

image

➤துளசி ஜூஸ் – ஆஸ்துமா, இருமல், சைனஸ், அசிடிட்டி, மலச்சிக்கல், காய்ச்சல் போன்ற பிரச்னைகளை தீர்க்கும். ➤தர்பூசணி ஜூஸ்: நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். ➤கேரட் ஜூஸ்: உடலில் உள்ள கட்டிகளை எதிர்த்து போராடும். பசியை கட்டுக்குள் வைத்து உடல் எடையை குறைக்க உதவும். ரத்த சுத்திகரிப்புக்கு உதவியாக இருக்கும். அனைவரும் ஆரோக்கியமாக இருக்க, SHARE THIS.

News February 2, 2026

பாகிஸ்தானின் முடிவுக்கு ICC கொடுத்த பதிலடி

image

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடப் போவதில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து PCB-யிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என தெரிவித்த ICC, இந்த முடிவு சர்வதேச விளையாட்டுகளின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ள ICC, முடிவை மாற்றிக்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!