News October 26, 2024

சண்முக நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

பழனி பாலாறு பொருந்தலாறுஅணை தொடர்மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. அணையிலிருந்து சண்முக நதி ஆற்றில் 200 கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கூடுதல் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சண்முக நதி ஆறு செல்லும் கோரிக்கடவு, மானூர், நரிக்கல்பட்டி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2024

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

image

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், ஆலம்பாடி கிராமம், எஸ்.ஜி.கிரானைட்ஸ் பல வண்ண கிரானைட் சுரங்கம் அமைவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்டறியும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நவ.22 அன்று 11 மணிக்கு ஆலம்பாடி ஊராட்சி, சமுதாயக் கூடத்தில் நடைபெற  இருந்தது. இந்நிலையில் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது என ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

திண்டுக்கல்லில் இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News November 19, 2024

திண்டுக்கல்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று ஒருநாள் இலவச அனுமதி ➤பழனி அருகே விபத்து: சிசிடிவி ➤திண்டுக்கல் மாவட்டத்திற்கு மழை அறிவிப்பு ➤திண்டுக்கல்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை ➤வேடசந்தூர் குடகனாறு அணை திறப்பு ➤ 2 லட்சம் கேட்கும் அதிகாரிகள்: குமுறும் பயனாளிகள் ➤வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை ➤வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் ➤விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.