News January 22, 2025

சட்ட விரோத கருக்கலைப்பு; பெண் இடைத்தரகர் கைது

image

சட்ட விரோத கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரஞ்சித், ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர்களை தருமபுரி மருத்துவத்துறை இணை இயக்குனர் குழுவினர் பிடித்து அவர்களிடம் இருந்து 4 பாலினம் கண்டறியும் ஸ்கேன் இயந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கர்ப்பிணிகளை அனுப்பி வைத்த பெரியாம்பட்டியை சேர்ந்த இடைத்தரகர் வனிதாவை இன்று காலை ஆத்தூர் சிறப்பு பிரிவு போலிசார் கைது செய்தனர்.

Similar News

News September 23, 2025

தர்மபுரி புத்தகப் பேரவை விழிப்புணர்வு வாகனம்

image

தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7-வது புத்தகத் திருவிழா, தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் விரைவில் தொடங்க உள்ளது. இதையொட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்சியர் ரெ.சதீஸ், பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி உடனிருந்தார்.

News September 23, 2025

கரும்பு தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகின்ற 24.09.2025 புதன் கிழமை அன்று காலை 10 மணி அளவில் விவசாயிகளுக்கு கரும்பு மற்றும் தென்னை சாகுபடியில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. ஆகையால் விவசாயிகள் அனைவரும் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற வேளாண் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (செப்.22) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

error: Content is protected !!