News November 4, 2024

சட்ட விரோதமான செயல்களை கண்டித்து எஸ்.பியின் புதிய முயற்சி

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று(நவ.4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாட்ஸ்அப் (9940277199) தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தங்களது தகவல் தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 19, 2024

மருத்துவமனைகள் பாதம் பாதுகாப்போம் திட்டத்தில் இணைப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கால் இழப்புகளை தடுக்க ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டத்தில் 9 அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் 58 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதா மணி இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

30 இடங்களில் கண் பரிசோதனை முகாம்

image

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மனித வள மேம்பாட்டு நிறுவனம், விஷன் ஸ்பிரிங் இணைந்து நாளை (நவ.20) இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் வசிக்கும் 30 இடங்களில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News November 19, 2024

தமாகா சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

image

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தமாகா சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. பை பாஸ் சாலையில் நடந்த முகாமிற்கு, விருதுநகர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவருமான ராஜபாண்டியன் தலைமை தாங்கி, உறுப்பினர் சேர்க்கை பணியை துவக்கி வைத்து, உறுப்பினர் படிவத்தை வழங்கினார். சட்டசபை தொகுதிக்கு 2000 உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.