News December 31, 2025

சட்ட தன்னார்வலர்களுக்கு: பெரம்பலூரில் இலவச பயிற்சி

image

சட்ட தன்னார்வலர்கள் பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் செயல்பாடுகள், பணிகள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்ட தன்னார்வலர்களுக்கான அறிமுகம் மற்றும் பயிற்சி வகுப்பில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய சரண்யா, மிகவும் பின்தங்கிய பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தினார்.

Similar News

News December 31, 2025

பெரம்பலூர்: மஞ்சள் தாலி கயிறுடன் பிரச்சாரம்

image

தங்கத்தின் விலை இறங்கும் வரை மஞ்சள் தாலி கயிற்றை பயன்படுத்த வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண்கள் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க.சண்முகசுந்தரம் தலைமையில், பெண்கள் மஞ்சள் தாலி கயிறை கையில் ஏந்தி தங்கம் விலையை குறைக்கும் வரை தாலிக்கு தங்கம் வேண்டாம், மஞ்சள் தாலி கயிறை பயன்படுத்துவோம் என பிரச்சாரம் செய்தனர்.

News December 31, 2025

பெரம்பலூர் மக்களே! இது உங்களுக்கு தெரியுமா?

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே! உங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டங்கள், பேரூராட்சிகள், சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அது என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா?
1. வட்டங்கள்
குன்னம் வட்டம்
பெரம்பலூர் வட்டம்
வேப்பந்தட்டை வட்டம்
ஆலத்தூர் வட்டம்
2. சட்டமன்ற தொகுதிகள்
பெரம்பலூர் (தனி)
குன்னம்
3. பேரூராட்சிகள்
அரும்பாவூர்
குரும்பலூர்
இலப்பைகுடிக்காடு
பூலாம்பாடி
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 31, 2025

பெரம்பலூர்: மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

image

சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த சஞ்சீவி (28) வைகுண்ட ஏகாதசிக்காக விளாமுத்தூர் சாலையில் உள்ள வயலில் தென்னம் பாளை பறிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வராததால், சந்தேகமடைந்த அவரது சகோதரர் வயலில் சென்று பார்த்தப்போது மயங்கி கிடந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்பு விசாரணையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

error: Content is protected !!