News December 21, 2024
சட்ட கல்லூரி மாணவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சேரன்மகாதேவியில் குடும்ப சண்டையில் சட்டக் கல்லூரி மாணவன் மணிகண்டனை நேற்று அவரது உறவினர் மாயாண்டி என்பவர் வெட்டினார். பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் நேற்று மாலை உயிரிழந்தார். குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெற மாட்டோம் என உறவினர் கூறி வந்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக முடிவு ஏற்பட்டதால் மணிகண்டன் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.
Similar News
News November 17, 2025
நெல்லை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
திருநெல்வேலி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 17, 2025
நெல்லை மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்தடை

நெல்லை மாவட்டத்தின் அனேக இடங்களான நெல்லை புது பஸ்டாண்ட், வள்ளியூர், தாழையூத்து, பண்குடி, ஏர்வாடி, மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (நவ.18) இப்பகுதிகள் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
நெல்லை: தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பர் 21ம் தேதியன்று காலை 10 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். வேலைதேடுநரும் கல்வி சான்றுடன் பங்கேற்கலாம். கூடுதல் தகவல்களுக்கு நெல்லை Employment Office டெலிகிராம் சானலைப் பயன்படுத்தலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார்.


