News July 4, 2024
சட்டவிரோத மின் இணைப்புகள் மீது நடவடிக்கை

தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் இன்று (ஜூலை 4) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தர்மபுரி மாவட்டத்தில் வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறையின் சார்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் எனவும் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக மின் இணைப்புகள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
தர்மபுரி: டிகிரி இருந்தால் ரிசர்வ் வங்கியில் வேலை!

தர்மபுரி மக்களே, ரிசர்வ் வங்கியில் கிரேட்-பி பிரிவில் 83 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.55,200 – ரூ.99750 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 21-30. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30க்குள் இந்த <
News September 13, 2025
தர்மபுரி: வாங்கிய பொருளை மாற்ற மறுத்தால் புகார் அளிக்கலாம்

கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற (அ) பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. தர்மபுரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News September 13, 2025
தர்மபுரி: திருமண ஆசை காட்டி 16 வயது சிறுமி கடத்தல்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள செங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் திருமண ஆசை காட்டி கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறுமி முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.