News November 24, 2025
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

திருப்பூர் மாநகரத்துக்கு உட்பட்ட சுண்டமேடு மற்றும் மும்மூர்த்தி நகர் பகுதிகளில் உள்ள மதுபான கடை அருகே சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட சரவணன் மற்றும் கிரிநாத் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 49 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News November 26, 2025
திருப்பூர்: சொந்த வீடு வேண்டுமா?

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 26, 2025
திருப்பூரில் இப்பகுதியில் Shutdown! அலெர்ட்

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ரங்கநாதபுரம், ராமமூர்த்தி நகர், ராமையா காலனி, கொங்கு நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி காலனி, கொங்கு மெயின் ரோடு, குத்தூஸ்புரம், வெங்கடேசபுரம், குமாரனந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ்டாண்ட், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது
News November 26, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் கூத்தம்பாளையம் டாஸ்மாக் அருகே சட்ட விரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் திருமுருகன்பூண்டி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட லோகேஷ் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 30 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


