News June 27, 2024
சட்டம் பயில மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி

கோவை மாவட்டத்தில் 2024-2025ஆம் நிதியாண்டில் சட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. சட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் தங்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்ய தேவையான சட்டப் புத்தகங்கள் வாங்க நிதியுதவி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நேற்று (ஜுன் 26) மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
கோவை: 7 தனிப்படைகள் அமைத்து தேடும் போலீசார்!

கோவை விமான நிலையம் பின்புறம் காலியிடத்தில் தனியார் கல்லூரி மாணவியை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண் நண்பரை தாக்கி மாணவியை கடத்திச் சென்ற மூவர், 500 மீட்டர் தொலைவில் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினர். பீளமேடு போலீசார் 7 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
News November 3, 2025
கோவை: 10வது படித்தால் அரசு வேலை.. ரூ.50,400 சம்பளம்!

கோவை மக்களே, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News November 3, 2025
கோவை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

கோவை மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க https://tnurbanepay.tn.gov.in/LandingPage.aspx# என்ற இணையதளம் சென்று உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.


