News September 16, 2024
சட்டம் அறிவோம்: BNS பிரிவு 296 என்ன சொல்கிறது?

பொது இடத்தில் ஏதேனும் ஆபாசமானச் செயலைப் புரிந்தாலோ அல்லது ஏதேனும் ஆபாசமான பாடலைப் பாடினாலோ, ஆபாசமான வார்த்தைகளை சொன்னாலோ அல்லது வாசகத்தை உச்சரித்தாலோ BNS சட்டப் பிரிவு 296இன் படி குற்றமாகும். இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதம் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறைத்தண்டனை அல்லது ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
Similar News
News October 3, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 477 ▶குறள்: ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. ▶பொருள்: வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகு.
News October 3, 2025
BBL லீக்கில் அஸ்வினை வாங்கிய சிட்னி தண்டர்

ILT20 ஏலத்தில் முன்னாள் CSK வீரர் அஸ்வினை வாங்க யாரும் ஆர்வம் காட்டாதது அவருக்கான பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிக் பாஷ் லீக் (BBL) தொடரில் சிட்னி தண்டர் அணி அஸ்வினை தட்டி தூக்கியுள்ளது. இந்த சீசன் முழுவதும் இந்த அணிக்காக அவர் விளையாடவுள்ளார். கடந்த ஆகஸ்டில் IPL-ல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அஸ்வின், பிற நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்துகொள்வேன் என்று கூறியிருந்தார்.
News October 3, 2025
மொரோக்கோவில் Gen Z போராட்டம்: 3 பேர் பலி

நேபாளத்தை தொடர்ந்து மொரோக்கோவில் Gen Z தலைமுறையினரின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு போதுமான நிதி வழங்கப்படாத நிலையில், 2023 உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு கோடிக்கணக்கில் செலவழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் 6-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இதில் 3 பேர் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.