News August 14, 2024
சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும்

சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ”வரக்கூடிய 4 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு செய்த துரோகத்தை மறக்க மாட்டோம். உடனடியாக தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய நிதி தொகையை ஒன்றிய அரசு செலுத்த வேண்டும். மேக தாதுவில் அணைக்கட்ட ஒன்றிய அரசு கர்நாடகா அரசை அனுமதிக்க கூடாது” என்றார்.
Similar News
News October 14, 2025
சென்னையில் 3 லட்சம் பேருக்கு நோட்டிஸ்

சென்னை மாநகராட்சியில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு சொத்துவரியை செலுத்தாத சுமார் 3 லட்சம் பேருக்கு மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த மார்ச் முதல் செப்டம்பர் வரை அரையாண்டுக்கான சொத்து வரி ரூ.1.002 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டைக்காட்டிலும் ரூ.122 கோடி அதிகம் இருப்பினும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அரையாண்டு சொத்து வரி செலுத்தாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 14, 2025
சென்னை: ரயில்வேயில் நிரந்தர வேலை; இன்றே கடைசி!

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News October 14, 2025
சென்னையில் 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.