News October 25, 2025
சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் தன்னார்வலராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, அலுவலகங்களில் சட்ட தன்னார்வலராக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்தை 5.11.2025 மாலை 5 மணிக்குள் கடலூர் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுபத்ராதேவி தெரிவித்துள்ளார். https://cuddalore.dcourts.gov.in தெரிந்து கொள்ளலாம்.
Similar News
News October 26, 2025
கடலூர்: ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 25) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
கடலூர்: அருங்காட்சியகம் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு

நகராட்சி நிருவாகத்துறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி, கடலூர், மஞ்சக்குப்பம் சுப்பராயலு பூங்கா அருகே மீன் அருங்காட்சியகம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை இன்று (25.10.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரஹ்மான் உட்பட பலர் உள்ளனர்.
News October 25, 2025
கடலூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கடலூர், 12 ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு தேர்வு தேர்ச்சி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் தலைமையாசிரியர்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் இன்று (25.10.2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.எல்லப்பன் உட்பட பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் உள்ளனர்.


