News December 19, 2024

 சட்டசபை செயலரிடம் எம்எல்ஏ கடிதம்

image

புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சபாநாயகர் பதவியின் புனித தன்மையை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாலும், அரசியலமைப்பு சட்டத்தை மீறி அரசியல் சாயத்துடன் செயல்பட்டு வருவதால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என புதுச்சேரியின் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு இன்று சட்டமன்ற செயலரை சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.

Similar News

News March 8, 2026

புதுச்சேரி: பண மோசடியில் ஈடுபட்ட தாய் – மகன்!

image

பிரான்சில் வசித்து வரும் எழில்ராஜன்-கனிமொழி தம்பதியினர், புதுச்சேரியில் தங்களது நிலத்தை ரூ.19 லட்சத்திற்கு விற்றனர். அந்த பணத்தை கனிமொழியின் தாய் மற்றும் சகோதரன் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் பணத்தை திருப்பிக் கேட்டபோது, சகோதரன் மிரட்டியதாக கனிமொழி புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், தவளக்குப்பம் போலீசார் சகோதரன் இளவரசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 8, 2026

புதுச்சேரி: அரசு பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு

image

புதுச்சேரி தலைமை செயலகத்திலுள்ள தேர்வு அமைப்பின் சார்பு செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மொத்தம் 25 பணியிடங்களுக்கு 1 கேலரி அசிஸ்டெண்ட் மற்றும் 24 இளநிலை நூலக உதவியாளர், வரும் ஏப்ரல் 26-ம் தேதி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை ஏப்ரல் 11-ம் தேதி முதல் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.” என கூறியுள்ளார்.

News March 7, 2026

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் புதுச்சேரி தட்டாஞ்சாவடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

error: Content is protected !!