News March 6, 2025
சட்டசபையில் தலைமை செயலாளர் புதிய உத்தரவு

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. 12ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சட்டசபை நிகழ்வு குறித்து தலைமைச் செயலாளர் சரத் சவுகான் இன்று அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் சட்டசபைக்கு வரும் போது செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும், என தெரிவித்திருந்தார்.
Similar News
News August 30, 2025
வரும் எட்டாம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுவையில் மின்துறையைத் தனியாரிடம் கொடுத்த முதல்வா் ரங்கசாமி, அமைச்சா் நமச்சிவாயம் மற்றும் பிற அமைச்சா்களும் உடனடியாக பதவி விலக வேண்டும். வரும் செப்டம்பா் 8 ஆம் தேதி INDIA கூட்டணிக் கட்சி சாா்பில் ஆளுநா் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். முக்கிய நகரப் பகுதிகளில் தீ பந்த ஊா்வலம் நடைபெறும்.” என தெரிவித்துள்ளனர்.
News August 30, 2025
புதுச்சேரி காவல்துறையில் வேலை-APPLY NOW!

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர்கள், 148 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வரும் செப்டம்பர் 12-ம் தேதி மாலை மாலை 3 மணிக்குள் https://recruitment.py.gov.in/ என்ற இனையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அரசு வேலை தேடும் அனைவருக்கும் SHARE செய்ங்க…
News August 30, 2025
புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்!

“புதுச்சேரியில் பல இடங்களில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் சாரம் அவ்வை திடலில் இருந்து ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கும் முக்கிய நிகழ்ச்சி 31-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சில தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.” என புதுச்சேரி போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் ரஞ்சனா சிங் அறிவித்துள்ளார். SHARE IT…