News January 19, 2026
சச்சின் சாதனையை முறியடித்த கோலி

அதிக இடங்களில் சதமடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 35 வெவ்வேறு மைதானங்களில் சதமடித்து, சச்சினின் சாதனையை (34) முறியடித்துள்ளார். ரோஹித்(26), பாண்டிங்(21) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். இதேபோல், நியூசிலாந்துக்கு எதிராக அனைத்து வடிவங்களிலும் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். கோலிக்கு(10) அடுத்தபடியாக காலிஸ்(9), ஜோ ரூட்(9), சச்சின்(9) ஆகியோர் உள்ளனர்.
Similar News
News April 3, 2026
ராசி பலன்கள் (03.04.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News April 3, 2026
வேட்பாளர் பட்டியல் எப்போது வரும்? செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, 85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டதாகவும், இன்று இரவு (அ) நாளை காலை காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலை தலைமை வெளியிடும் எனவும் கூறியுள்ளார்.
News April 3, 2026
சமையல் எண்ணெய், சோப்பு விலை உயரும்…

மேற்காசிய போரின் தாக்கத்தால் அன்றாட பொருள்களின் விலை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு ஆகிய 2 காரணிகளும் மூலப் பொருள்களின் இறக்குமதி செலவை அதிகரித்துள்ளன. இந்நிலை தொடர்ந்தால், சமையல் எண்ணெய், சோப், பெயின்ட் போன்ற பொருள்களின் விலை 3-4% வரை உயரலாம். ஏற்கெனவே ஹோட்டல் உணவுகள், விமான டிக்கெட், சிமென்ட் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


