News March 31, 2026
சசிகலாவுடன் கூட்டணி இல்லை: திருமாறன் ஜி

NDA-வில் இருந்து விலகி, சசிகலாவுடன் கூட்டணி அமைத்து மதுரை தெற்கு தொகுதியில் திருமாறன் ஜி (SIFB)போட்டியிடுவதாக செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், NDA கூட்டணியில்தான் தென் இந்திய பார்வர்டு பிளாக் அங்கம் வகிப்பதாகவும், இதை கெடுக்கும் வகையில் தவறான செய்தி பரப்பப்படுகிறது என்றும் கூறினார். கட்சியின் தொண்டர்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 4, 2026
ரஜினி திருந்திவிட்டார்.. விஜய்? அமீர் அட்வைஸ்

ரஜினியுடன் விஜய்யை ஒப்பிட்டு அமீர் பேசியது கவனம் பெற்றுள்ளது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்ததும் அவரை நான் எதிர்த்தேன், எனவே அவர் தன்னை திருத்திக் கொண்டு அரசியலில் இருந்தே விலகி மீண்டும் நடிக்கச் சென்றார் என அமீர் கூறியுள்ளார். அதேபோல் அரசியல் பற்றி எதுவும் தெரியாமல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய்யும் கட்சியை கலைத்து விட்டுச் சென்றால் அவருக்கு நல்லது என தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து?
News April 4, 2026
இவர்களால் தான் தோற்றோம்: ருதுராஜ்

210 ரன்களை இலக்காக வைத்தும் CSK வெற்றிக்கனியை எட்டவில்லை. இதுகுறித்து பேசிய கேப்டன் ருதுராஜ், PBKS-ன் பேட்டர்களை எதிர்கொள்ள சஹாரும், நூர் அகமதுவையும் நம்பி களமிறக்கினேன். ஆனால் அவர்கள் இன்று சிறப்பாக பந்துவீசவில்லை. இதனால் வெற்றி பெற முடியாமல் போனது கூறியுள்ளார். இந்த இன்னிங்ஸில் விக்கெட் ஏதும் எடுக்காமல் சஹார் 46 ரன்களையும், நூர் 38 ரன்களையும் அளித்தனர்.
News April 4, 2026
தர்மம் ஒருநாள் வெல்லும்.. அமர் பிரசாத் ரெட்டி

தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாத நிலையில், அமர் பிரசாத் ரெட்டி தனது X பக்கத்தில் இன்று தேர்தல் களம் எனக்கு மறுக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் மக்கள் பணி எனக்கு என்றும் மறுக்கப்படாது என தெரிவித்துள்ளார். அங்கீகாரம் என்பது ஒரு காகிதத்தில் இல்லை, நான் சிந்திய வியர்வையிலும், மக்களின் நம்பிக்கையிலும் இருக்கிறது. தர்மம் ஒருநாள் வெல்லும், அதுவரை என் உழைப்பு ஓயாது எனவும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


