News January 14, 2026
சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு: மாணிக்கம் தாகூர்

PM மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில், <<18853976>>’பராசக்தி’<<>> படக்குழுவும் பங்கேற்றிருந்தது. இதை சுட்டிக்காட்டி, ‘சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு; ஆக ஜனநாயகன் blocked’ என்று மாணிக்கம் தாகூர், பதிவிட்டுள்ளார். முன்னதாக ‘பராசக்தி’ படம் தோல்வி என்றும் அவர் கூறியிருந்தார். சமீபகாலமாகவே ஆட்சியில் பங்கு, விஜய்க்கு ஆதரவு என அவர் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், மீண்டும் சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார்.
Similar News
News February 5, 2026
தர்ணாவில் ஈடுபடுவேன்: ராஜமெளலி

தான் இயக்கும் ‘வாரணாசி’, 3 மணிநேரம் ஓடக்கூடிய ஒரே பாகமாக மட்டுமே வெளியாகும் என ராஜமெளலி தெரிவித்துள்ளார். படம் வெளியாவதற்குள் இந்தியாவில் போதிய IMAX திரைகள் வந்துவிடுமா என்ற கேள்விக்கு, நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட இடத்தின் முன்பு தர்ணா செய்வது வழக்கம். அதன்படி இந்தியாவில் நிறைய IMAX திரைகள் உருவாக்க சொல்லி US-ல் உள்ள IMAX அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபடுவேன் என்றார்.
News February 5, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 602
▶குறள்:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
▶பொருள்: குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
News February 5, 2026
ஹிந்தி திணிப்பு கிருமியை கட்டுப்படுத்தணும்: கனிமொழி

சிவகாசி ரயில் நிலைய பெயர்ப்பலகையில், தமிழ் எழுத்துக்களை மாற்றி ஹிந்தியை இடம்பெறச் செய்தது சர்ச்சையாகியுள்ளது. தனது X பதிவில் கனிமொழி, சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் ஹிந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதாக சாடியுள்ளார். மேலும், நோய்த்தொற்றை போல ஊரெங்கும் பரவிடும் ஹிந்தி திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.


