News November 11, 2025
சங்கரன்கோவில் வழி சபரிமலை செல்லும் சிறப்பு ரயில் அறிவிப்பு

தென்னக ரயில்வேயின் நான்டேட் – கொல்லம் – நான்டேட் சிறப்பு ரயில் வண்டி எண் 07111/07112 – 20.11.25 – 15.01.26 வரை ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் ஹைதராபாத்தில் இருந்து புறப்படும். 22.11.25 – 17.01.26 வரை ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் கொல்லும் ஜங்ஷன் இருந்து புறப்படும். வழி: மராட்டிய மாநிலம் நான்டேட், கச்சிகுடா, வேலூர், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சங்கரன்கோவில் வழியாக கொல்லம் வரை செல்லும்.
Similar News
News November 11, 2025
கரிவலம்வந்தநல்லூர் கோவில் வளாகத்தில் வணிக வளாகம் கட்ட தடை

தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பால்வண்ணநாதர் ஒப்பனை அம்மன் திருக்கோவிலில் சுற்றியுள்ள பகுதிகளில் வணிக வளாகம் கட்டப்படுவதை கண்டித்து பல அமைப்புகள் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் கிளை மதுரை பெஞ்சில் தீர்ப்பின் படி கோவில் வளாகத்தில் கட்டப்படும் வணிக வளாகத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
கடையநல்லூர் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

மாதாந்திர பணிகள் காரணமாக கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துசாமிபுரம், கருப்பா நதி, தாா்க்காடு, போக நல்லூர், கண்மணியாபுரம் பகுதிகளில் நவம்பர் 12ஆம் தேதி 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் சீரான மின் விநியோகம் வழங்கப்படும்.
News November 10, 2025
தென்காசி மக்களுக்கு ஹேப்பி நீயூஸ்

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் இருந்து கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரெயில் நவ.20 முதல் ஜன. 15 வரையும், கொல்லத்தில் இருந்து நான்டெட்டிற்கு நவ.22 முதல் ஜன.17 வரையும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் திருப்பதி வழியாக செல்கிறது. இதனால் தென்காசி மாவட்ட பொதுமக்கள் திருப்பதி செல்ல நேரடி ரெயில் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


