News January 1, 2026

சங்கரன்கோவில்: கல்லூரி மாணவி தற்கொலை!

image

சங்கரன்கோவில் அருகே கருத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள் விஜயசாந்தி (22) கல்லூரி மாணவி. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று காலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News

News January 23, 2026

தென்காசி: இளைஞர் உட்பட 3 பேர் மீது குண்டர் சட்டம்

image

ஊத்துமலை காவல் நிலைய கஞ்சா மற்றும் ஆயுத சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான சசிகுமார்(46), கடையம் கல்யாணிபுரம்  பாலமுருகன் (35) மற்றும் மகேஷ் (22) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் பரிந்துரை செய்தார். அதன் பேரில், ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் குண்டாஸில் கைது செய்யப்பட்டனர்.

News January 23, 2026

நலவாரியத்தில் பதிவு பெற்றவர்களுக்கு உதவித்தொகை

image

தென்காசி மாவட்டத்தில் பதிவு செய்த அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் அசல் கல்வி ஆவணங்களுடன் தென்காசி 275, கே.ஆர்.காலனி பிரதான சாலையில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் நேரில் வந்து பயிற்சி விண்ணபத்தினை பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633214606 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்.

error: Content is protected !!