News October 16, 2025

சங்கரன்கோவில் அருகே நாய் கடித்து 2 பேர் படுகாயம்

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் ராமர் (37) மற்றும் முருகையா (66) ஆகியோர் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, வன்னிக்கோனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Similar News

News October 17, 2025

தென்காசியில் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

image

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தலை சிதைந்த நிலையில் ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்துள்ளது. தினசரி பயணிகள் அதிகமுள்ள இந்த ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடை அருகே இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டு, விரைந்து வந்து பார்த்தபோது இந்த கோர சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுக்குறித்து ரயில்வே போலீசார் விசாரணை.

News October 17, 2025

தென்காசியில் கனமழை – வெள்ளபெருக்கு

image

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும் வரை அருவிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது, வடகிழக்குப் பருவமழை துவங்கி உள்ளதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகள் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

News October 17, 2025

முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற  விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்களை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ஊரக வளர்ச்சி முகமை பழைய கட்டிடத்தில் இயங்கிவரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் 17.11.2025க்குள் அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!