News March 31, 2025
சங்கரன்கோவிலில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தென்காசி , சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜஹாங்கீா். இவரது மனைவி மெஹ்ராஜ்(48). இவர், தனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி கொடுத்தாராம். அப் பெண் வாங்கிய பணத்தைச் கட்டாததால், அந்த பணத்தை மெஹ்ராஜ் செலுத்தி வந்தாராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்தார். போலீஸாா் விசாரிகின்றனர்.
Similar News
News April 2, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 1, 2025
தூக்கமின்றி தவித்து வாலிபர் தற்கொலை

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே உள்ள வேலாயுதபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (27)இவருக்கு அடிக்கடி தூக்கத்தில் கெட்ட கனவு வந்துள்ளது. இது குறித்து அவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊர் மேல் அழகியான் காட்டுப்பகுதியில் தூக்கு போட்டு முயற்சித்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News April 1, 2025
தென்காசி: கடன் தொல்லை தீர்க்கும் கோயில்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மலை உச்சியில் ஒக்க நின்றான் பொத்தையில் ராமர் சீதாதேவி அருள்பாலிகின்றனர். சீதாதேவியை தேடி, ராமன் ஒற்றை காலில் நின்று சீதையைத் தேடி நின்ற பகுதிதான் ஒக்க நின்றான் பொத்தை என்று அழைக்கப்படுகிறது. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சிறப்பான தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. *கடன் தொல்லையில் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணவும்*