News November 24, 2024

சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க அரசு அழைப்பு

image

2025 பொங்கலன்று சென்னை & 7 இடங்களில் நடக்கும் “சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில்” பங்கேற்க விரும்பும் குமரி மாவட்ட கலைக்குழுவினர், தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் 5 நிமிட வீடியோவை CD/Pen Drive ல் உதவி இயக்குநர் மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21 அரசு அலுவலர் குடியிருப்பு, திருநெல்வேலி 627007. போன்: 0462-2553890 Email: racct-nu@gmail.com என்ற முகவரியில் அனுப்பலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News October 17, 2025

குமரி: மாமனாரை தாக்கிய மருமகன்

image

குளச்சல் அருகே கொட்டில்பாடு என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 70) இவர் வீட்டில் இருக்கும்போது இவரது மருமகன் வீட்டில் நுழைந்து இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த ஸ்டீபன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபனின் மருமகனை கைது செய்தனர். இதுக்குறித்து போலீசார் விசாரணை.

News October 17, 2025

குமரி: பட்டாசுகளுக்கு வரைமுறை – ஆட்சியர்

image

குமரி ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: தீபாவளி பண்டிகையையொட்டி அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கவேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசைபகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

News October 16, 2025

குமரி உட்பட தமிழகத்தில் எங்கும் அனுமதி கிடையாது

image

குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ் இன்றைய சட்டப்பேரவையில் குமரி மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்க வேண்டும் என கூறினார். குமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை என தமிழகத்தில் எந்த வகையிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கமாட்டோம் என உறுதியளிக்கிறேன். மத்திய அரசு மக்களின் கருத்தை கேட்காமல் இதை நிறைவேற்றுவோம் என கூறுகிறது என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!