News March 30, 2025
சங்கடம் தீர்க்கும் மொரட்டாண்டி சனீஸ்வரர்

புதுச்சேரி அருகே கழுவெளி சித்தர் தவம் செய்த இடமான மொரட்டாண்டி எனும் கிராமத்தில், உலக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய சித்தரின் கனவில் வந்து அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நவக்கிரக கோயிலில் 27 அடி உயரம் கொண்ட சனீஸ்வரன் சிலை உள்ளது. மேலும் அங்கு மற்ற நவக்கிரக சிலைகள் 15 அடி உயரம் இருக்கும். இங்குள்ள சனீஸ்வரரை வணங்கினால் வாழ்வின் துன்பங்களை நீங்கும் என்று கூறுகின்றனர். இதை பிறருக்கும் பகிரவும்
Similar News
News April 6, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “போலியான உடனடி கடன் செயலி மூலம் கடன் பெறுபவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். ஆகையால் உடனடிக் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதள குழுக்களில் தெரியாத நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங்கை நம்ப வேண்டாம்” என்றார்
News April 6, 2025
கடன் பெற்றவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரிப்பதாக மிரட்டல்

புதுவையைச் சேர்ந்த விஜய் என்பவர் ஆன்லைன் மூலம் கடன்பெற்று அதை திருப்பியும் செலுத்தியுள்ளார். இதனிடையே மர்ம நபர் அவரை தொடர்பு கொண்டு, மேலும் பணம் தராவிட்டால் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி, ரூ.37,000 பணத்தை பெற்றதாக விஜய் கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்போது சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
News April 5, 2025
இடி, மின்னல், கடல் அரிப்பை மாநில பேரிடர்களாக அறிவிப்பு

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வெப்ப அலை வீசுதல், கடல் அரிப்பு, இடி மின்னல் ஆகியவை புதுச்சேரி மாநிலத்தின் பேரிடர்களாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த மூன்று பேரிடர்களால் பாதிக்கப்பட்டு இறப்பு அல்லது காயம் அடையும் சம்பவங்களில் மாநில பேரிடர் மீட்பு நிதி விதிமுறைகளின்படி புதுச்சேரி யூனியன் பிரதேச பேரிடர் மீட்பு நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும்.