News December 14, 2025
சங்ககிரி அருகே மினி லாரி விபத்து: 4 பேர் காயம்!

சங்ககிரியை அடுத்த ஆணைகவுண்டம்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக் (38). இவர் பிரபு, கருணாகரன், குமார் ஆகியோருடன் டைல்ஸ் லோடு ஏற்றிக்கொண்டு நேற்று திருப்பூர் நோக்கிச் சென்றார். சங்ககிரி கலியனூர் பைபாஸ் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பயணித்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
சேலம்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, சேலம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இங்கு <
News December 16, 2025
சேலம்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

சேலம் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய எளிய வழி. உங்கள் போனில் TamilNilam Geo-Info என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் தொடர்பு எண்ணை பதிவு செய்யவும். பின் நிலம் இருக்க கூடிய மாவட்டம், வட்டம், கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து நிலத்தின் பட்டா விவரம், FMB, லொக்கேஷன் உள்ளிட்ட பல விவரங்களையும் அறிய முடியும். யாருக்காவது தேவைப்படும் SHARE பண்ணுங்க!
News December 16, 2025
சேலத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி, கட்டுமானம், நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். SHARE IT


