News January 26, 2026
சங்ககால நட்புடன் மம்மூட்டியை வர்ணித்த கமல்

நண்பர் மம்மூட்டி இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார் எனக் கூறி கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்து, ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம் என்றும், என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு எனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 11, 2026
தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா? அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஒரே நேரத்தில் இரு கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது நியாயமில்லை என தேமுதிகவை அமைச்சர் ராஜகண்ணப்பன் சீண்டியுள்ளார். விசுவாசம் என்றால் ஒரு பக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவர், விசுவாசத்திற்கு பெயர் போன கட்சி என்றால் திமுகதான் எனவும் கூறியுள்ளார். மேலும், தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா எனவும், பெரிய கட்சியை பற்றி பேசலாம் என்றும் அவர் வெளிப்படையாக அதிருப்தியை காட்டியுள்ளார்.
News February 11, 2026
CINEMA 360°: மீண்டும் பிரதீப் படத்தில் மமிதா பைஜூ!

பிரதீப் தயாரிப்பில், அவரது உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் மமிதா நடிக்கவுள்ளராம் *‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்பு, இணைவதாக அறிவிக்கப்பட்ட படத்தில் தற்போது சிம்புவுக்கு பதிலாக SK நடிக்கலாம் எனப்படுகிறது *அஜித் ₹165 கோடி சம்பளம் கேட்டதால், தெலுங்கு தயாரிப்பாளர் அனில் சுங்கரா தயக்கத்தில் இருக்கிறாராம் *சூர்யாவின் ‘கருப்பு’ படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
News February 11, 2026
துணை முதல்வர் அஜித் பவார் மரணம்.. அதிர்ச்சி தகவல்

மகாராஷ்டிரா DCM <<18980498>>அஜித் பவாரின்<<>> மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக அவரது உறவினரும், NCP(SP) MLA-வுமான ரோஹித் பவார் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜன.27-ல் அஜித் பவார் பாராமதி செல்லவிருந்ததாகவும், அது ஜன.28-ம் தேதிக்கு மாற்றியதில் ஏதோ சதி இருப்பதாகவும் கூறினார். அத்துடன், பைலட் கபூர் குடிபோதை சர்ச்சையில் சிக்கியவர் எனவும், அவருக்கு முறையாக சோதனை செய்யப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


