News December 9, 2024
சக்தி மாலை இருமுடி விழா: சென்னைக்கு பகலில் ரயில்!

மேல்மருவத்தூரில் வரும் டிச.,15 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்.,11 ஆம் தேதி வரை தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள், குறிப்பாக பெண்கள் கலந்து கொள்வது வழக்கம். இவர்கள் மேல்மருவத்தூர் செல்வதற்கு வசதியாக பகல் நேரத்தில் சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என தூத்துக்குடி ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News March 3, 2026
குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டு பேர் கைது

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சுந்தரபாண்டி (21) மற்றும் தருவைகுளம் பகுதியில் நடந்த கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய கட்ட முருகன் (31) ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை தடுப்பு காவல் சிறையில் அடைத்தனர்.
News March 2, 2026
BREAKING சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டு விசாரணைக்காக காவல் துறையால் அழைத்துச் சென்ற போது காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 5 ஆண்டுக்கு மேலாக நடக்கு இந்தவழக்கில் மார்ச்.23 அன்று நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்க உள்ளார்.
News March 2, 2026
தூத்துக்குடி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

தூத்துக்குடி மக்களே, இங்கு <


