News September 28, 2025

சக்கிமங்கலம் பாம்பு கடித்து பெண் பலி

image

சக்கிமங்கலம் உடன் குண்டு பகுதியை சேர்ந்தவராக ராக்காயி வயது 56, இவர் நேற்று தனது வீட்டில் உணவு சமைத்துக் கொண்டிருந்த பொழுது விறகு கட்டைக்குள் இருந்து பாம்பு ஒன்று ராக்காயியை கடித்தது, உடனடியாக வரை மீட்டு குடும்பத்தினர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராக்காயி உயிரிழந்தார்.

Similar News

News January 22, 2026

மதுரை: 17 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்

image

மதுரை கோ.புதூரை சேர்ந்­த­ வேல்முரு­கன் மகன் பாரத் (20), 17 வயது சிறு­மியை ரக­சியமாக திரும­ணம் செய்து கொண்­டார். சிறுமிக்கு உடல் நலக்­கு­றைவு ஏற்­பட்டு அவர் கோ.புதூர் ஆரம்ப சுகா­தார நிலை­யத்­திற்கு அழைத்து சென்­ற போது சிறுமி 5 மாத கர்ப்­ப­ம் என தெரிந்­தது. மதுரை மேற்கு ஊர் நல அலுவலர் பாலஜோ­தி காவல் நிலை­யத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்­டத்தில் பாரத்தை இன்று கைது செய்தனர்.

News January 22, 2026

மதுரையில் ஒர் நாள் வேலை நிறுத்தம்

image

தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, பிப்.12 அன்று மதுரையில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதுகுறித்த அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று ஜன.22-இல் மதுரையில் நடந்தது. இச்சட்டங்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என இக்கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.

News January 22, 2026

மதுரை வழியாக புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை

image

திருவனந்தபுரம் முதல் தாம்பரம் இடையே அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் புதிதாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த, அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் மதுரை வழியாக தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலில்11 பொது பெட்டிகள் உட்பட 21 பெட்டிகள் இடம் பெறுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் சேவையை நாளை தொடங்கி வைக்கிறார்.

error: Content is protected !!