News January 8, 2026
கௌரவத்தை இழந்துவிட்டு, T20I WC விளையாடணுமா..

நாட்டின் கெளரவத்தையும் இழந்துவிட்டு இந்தியாவில் T20I WC விளையாட வேண்டுமா என <<18785386>>வங்கதேச <<>>விளையாட்டுத்துறை ஆலோசகர் கேள்வி எழுப்பியுள்ளார். வீரர்களின் பாதுகாப்பை தாண்டி, இது நாட்டின் ‘தேசிய அவமானம்’ சம்பந்தப்பட்ட விஷயமாகவும் மாறிவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா சென்று விளையாடவில்லை என்றால், T20I WC-யை விளையாடும் வாய்ப்பை இழக்கலாம் என ICC வங்கதேசத்திற்கு தெரிவித்தாக கூறப்படுகிறது.
Similar News
News January 9, 2026
சற்றுமுன்: ஒரே நாளில் ₹4,000 குறைந்தது.. HAPPY NEWS

வெள்ளி விலை இன்று (ஜன.9) கிராமுக்கு ₹4 குறைந்து ₹268-க்கும், 1 கிலோ வெள்ளி ₹4,000 குறைந்து ₹2,68,000-க்கும் விற்பனையாகிறது. ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் வெள்ளி விலை 2 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹9,000 குறைந்துள்ளது. அதேநேரம், தங்கம் விலை இன்று உயர்ந்த நிலையில், வெள்ளி குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News January 9, 2026
உலகின் மிகவும் கஷ்டமான தேர்வுகள் இவைதான்!

எக்ஸாம் என்றாலே நம்மில் பலருக்கும் கஷ்டம்தான். ஆனால், எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தாலும், பாஸ் பண்ணுவதற்கு மிகவும் கடினமான தேர்வுகளும் உலகில் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி உலகின் டாப் 9 கடினமான தேர்வுகளை கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்யுங்க. நீங்க எழுதிய கஷ்டமான எக்ஸாம் எது?
News January 9, 2026
ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது: ராமதாஸ்

CM ஸ்டாலின் ஆட்சி நன்றாக தான் இருக்கிறது. ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் பேசிய அவர், காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கேட்பதில் விருப்பம் இருந்தாலும், கலைஞரின் ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தேன் என கூறியுள்ளார். அன்புமணி அதிமுகவுடன் கூட்டணி அறிவித்துள்ள நிலையில், ராமதாஸின் பேச்சு அவர் திமுக கூட்டணிக்கு செல்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


