News October 25, 2025
கோவை: INSTA-வில் ஆபாச படம் அனுப்பிய வாலிபர்

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடன் மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். 2 பேர், இன்ஸ்டாவில் நட்பாக பேசி வந்தனர். இந்நிலையில், அப்பெண்ணின் படத்தை AI மூலம் ஆபாசமாக எடிட் செய்து போலியான ஐ.டி மூலம் அப்பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 5, 2026
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.06) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, காமராஜர் ரோடு, பாரதி நகர், சிங்காநல்லூர், ராமானுஜ நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், ஹோப் காலேஜ் முதல் சிவில் ஏரோ வரை, உப்பிலிபாளையம், வரதராஜபுரம், ஒண்டிப்புதூர் ஒரு பகுதி, மசக்காளிபாளையம், ராக்கிபாளையம், குமரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், கதிர்நாயக்கன்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News February 5, 2026
கோவை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News February 5, 2026
கோவை: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க


