News January 8, 2026
கோவை: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

கோவை மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <
Similar News
News January 24, 2026
சிறுமுகை அருகே கோர விபத்து: ஒருவர் பலி

சிறுமுகை உளியூர் பகுதியைச் சேர்ந்த பாரதி, ராமசாமி மற்றும் சக்திவேல் ஆகிய மூவர் ஒரே பைக்கில் விஎன்கே தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதில், பாரதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 24, 2026
வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதி

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ‘தென்கயிலாயம்’ என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை நடைபெறும் இந்த மலை யாத்திரைக்கு, இந்த ஆண்டு பிப்.1-ம் தேதி முதல் மே.31-ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. (SHARE)
News January 24, 2026
PM பேச்சு CM-யை கலக்கமடைய வைத்துள்ளது: வானதி சீனிவாசன்

கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் திரண்ட பல லட்சக்கணக்கான மக்கள் கூட்டமும், “திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் ‘கவுன்டவுன்’ துவங்கி விட்டது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ‘டபுள் எஞ்சின்’ அரசு அமைவது உறுதி” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு CM ஸ்டாலினை கலக்கமடைய வைத்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.


