News January 9, 2026

கோவை: வீட்டில் சிலிண்டர் இருக்கா?

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். (ஷேர் செய்யுங்கள்)

Similar News

News January 22, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (22.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

கோவை: காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து!

image

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவி ஹன்சிகாவை, அதே வகுப்பில் பயிலும் ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ஹர்ஷவர்தன் என்ற மாணவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை மாணவியை, ஹர்ஷவர்தன் காதலிக்க வற்புறுத்திய நிலையில் அவர் மறுக்கவே, கத்தியால் குத்தியுள்ளார். சம்பவ இடத்தில் சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 22, 2026

கோவை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

கோவை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

error: Content is protected !!